திருவனந்தபுரம்: மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பாலியல் புகாருக்கு ஆளானதால், நடிகர் மோகன்லால் தலைமையில் இயங்கிய அச்சங்கம் கலைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் நடிகர் தேவன் போட்டியிட்டனர். இந்த நிலையில் நேற்று கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் தேர்தல் நடைபெற்றது. 507 உறுப்பினர்களில் 298 பேர் ஓட்டு போட்டனர்.
பிற்பகலுக்குப் பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக நடிகர் ஜெயன் சேர்த்தலா மற்றும் நடிகை லட்சுமி பிரியாவும், பொதுச் செயலாளராக நடிகை குக்கு பரமேஸ்வரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மலையாள நடிகர்கள் சங்கம் தொடங்கி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நடிகை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
