புதுடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய கார்கே, ” பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் வெளிப்படையாக நீக்கப்படுகின்றது. உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான போராட்டம் இல்லை. இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்றவும் , அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும் நடத்தப்படும் போராட்டமாகும். இப்போது ஆளும் கட்சி ஆட்சியில் நீடிப்பதற்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் ஒழுக்கக்கேடான விவகாரங்களை செய்வதற்கு தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
