×

அன்புமணி நடைபயணம் காடுவெட்டி குரு பெயரை கூறுமாறு கட்சியினர் கூச்சல்

உளுந்தூர்பேட்டை: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே அன்புமணி தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கினார். மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம் தொகுதிகளில் நடைபயணத்தை முடித்த அன்புமணி 2வது நாளாக நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளில் உரிமை மீட்பு நடைபயண பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.

உளுந்தூர்பேட்டையில் கடைவீதி பகுதியில் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் பகுதியில் அன்புமணி பேசுகையில், நான் நடுவன் அரசு அமைச்சராக இருந்தபோது போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்தேன். என்னிடம் மாபியா கும்பல் 2000 கோடி வரை தருவதாக பேரம் பேசினார்கள். அதற்கெல்லாம் அசையாதவன் இந்த அன்புமணி என்றார். முன்னதாக பேரணியாக சென்றபோது கடைவீதியில் நின்ற அரசு பேருந்துகளை சிலர் ஓங்கி அடித்ததால் அன்புமணி டென்ஷன் ஆனார். அப்போது அவருக்கு எதிரே இருந்த இளைஞர்கள் சிலர் காடுவெட்டி குரு பெயரை கூறுமாறு கூச்சல் எழுப்பினர். அதனை அவர் கண்டுகொள்ளாமல் அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Anbumani ,Forest ,RAMADAS ,PALMAKA ,Tamil Nadu ,Mundinam ,Viluppuram district ,Mayilam ,Wickravandi ,Vilupuram ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...