×

மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாவட்ட சிறப்பு தீர்ப்பாயம் திறப்பு

காஞ்சிபுரம், ஆக.15: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சவுந்தர், கே.குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் வஸ்தவா, காஞ்சிபுரத்தில், செங்கல்பட்டு எம்ஜிஆர் மாவட்ட பொது ஊழியர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் முதல் மாடியில் ரூ.10.94 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மாவட்ட சிறப்பு தீர்ப்பாயத்தினை, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி செம்மல், ரூ.10.94 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மாவட்ட சிறப்பு தீர்ப்பாயத்தினை குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மாவட்ட சிறப்பு தீர்ப்பாயம் ஜெய, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் தலைமை குற்றவியல் நடுவர் மோகனாம்பாள், காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி மோகனகுமாரி, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, காஞ்சிபுரம் முதன்மை சார்பு நீதிபதி அருண் சபாபதி, காஞ்சிபுரம் கூடுதல் சார்பு நீதிபதி திருமால், காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பென்னி ராஜன், காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தியா தேவி, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் எண்-1 இனியா கருணாகரன், காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் எண்-2 நவீன் துரைபாபு, காஞ்சிபுரம் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சங்கம் தலைவர் சுப்பிரமணி, லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் திருப்பதி முரளிகிருஷ்ணன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சிவகோபு, அரசு வழக்கறிஞர் ஏ.கே.ரமேஷ், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : District Special Tribunal ,Kanchipuram ,Madras High Court ,Justices ,S. Soundar ,K. Kumaresh Babu ,Chief Justice ,Manindra Mohan Vastava ,Chengalpattu ,MGR District Public Employees ,Society ,
× RELATED மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் ரூ.3...