திருப்பூர், ஆக. 14: திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், நகர சுகாதார செவிலியர்கள் 12, ஆய்வக நுட்புநர் 4, மருத்துவமனை பணியாளர் 5 காலிப்பணியிடங்கள் உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் நேர்காணல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் கலைச்செல்வன், புள்ளியியல் நுட்புநர் வேலராமன், மலோியா அதிகாரி சாந்தி, அஜித்குமார், தங்கமணி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேர்காணலில் ஈடுபட்டனர். இதில் ஆய்வக நுட்புநர் பணிக்கு 24 பேரும், நகர சுகாதார செவிலியர் பணிக்கு 47 பேரும், மருத்துவமனை பணியாளர் பணிக்கு 47 பேர் விண்ணப்பித்தனர். விரைவில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.
