- கோவில்பட்டி
- மாரீஸ்வரி
- சுபூ
- மாரியம்மாள்
- இரச்சி கிராம நிர்வாக அலுவலகம்
- தூத்துக்குடி மாவட்டம்
- விஏஓ செந்தில்குமார்
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்பவர் தனது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆகியோருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இதற்கு விஏஓ செந்தில்குமார் ரூ.3500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் மாரீஸ்வரி செந்தில்குமாரை அலுவலகத்தில் சந்தித்து பணத்தை வழங்கினார். அப்போதுஅங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வாரிசு சான்றிதழ் கேட்டவரிடம் லஞ்சம் கேட்ட தவசிக்குறிச்சி விஏஒ பிரேம் ஆனந்தும் கைது செய்யப்பட்டார்.
