×

சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு: செல்வப்பெருந்தகை

சென்னை: சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ‘ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங். எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கின்றோம். தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஆளுநர்’ என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் பெயரிலான பல்கலை. மசோதாவுக்கு ஒப்புதல் தராததைக் கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : Independence Day ,Governor R. N. Ravi ,Tea Party ,Chennai ,Governor R. N. ,Tamil Nadu Congress Committee ,Ravi ,Governor ,M. L. A. ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...