×

சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

சென்னை : சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,” நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்டு 15-ந்தேதி (நாளை மறுதினம்) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை மகிழ்ச்சியும், எழுச்சியும் மிக்க நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.

இதுதவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். ” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Independence Day ,School Education Department ,Chennai ,Directorate of School Education ,Independence Day… ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு மலையாள நடிகர்...