கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை கோவை வந்த சிங்கப்பூர் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த பஹத் மோன் முஜீப், சுஹைல் வாழமத் உபைதுல்லா ஆகியோரிடம் ரூ.7 கோடி மதிப்புள்ள மண்ணை பயன்படுத்தாமல் நீரின் மூலம் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வளர்த்த 6.7 கிலோ ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். இதே விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம் மற்றும் பாண்டி துரை சுப்பையா ஆகியோர் ரூ.18.67 லட்சம் மதிப்புள்ள 28 டிரோன்களை சுங்க வரி செலுத்தாமல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
