- கர்நாடக அமைச்சர்
- ராஜண்ணா
- பெங்களூரு
- மக்களவை
- ராகுல் காந்தி
- மகாதேவபுரா
- கர்நாடக
- கூட்டுறவு அமைச்சர்
- கர்நாடக காங்கிரஸ் அரசு
- கே.என்.ராஜண்ணா
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மகாதேவபுரா தொகுதியில் முறைகேடாக 1 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கபபட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி உள்ளார். இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் கூட்டுறவு துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா வெளியிட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடந்தது உண்மைதான். அந்த பட்டியல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தயாரிக்கப்பட்டது. அப்போது எல்லோரும் கண்மூடி இருந்தார்களா? இப்போது போராட்டம் நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, ராஜண்ணாவை டிஸ்மிஸ் செய்யும்படி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டது. இதனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி கே.என்.ராஜண்ணாவுக்கு முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார். பின்னர், ராஜண்ணா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கினார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கர்நாடக கவர்னர் தாவர்சந்த்கெலாட் அறிவித்துள்ளார்.
