- மகாராஷ்டிரா
- மத்தியப் பிரதேசம்
- நாக்பூர்
- அமித் யதவ்
- நாக்பூர், மகாராஷ்டிரா
- கியர்ஸி
- Karanpur
- மஹாபி
- தியோலாபர்...
நாக்பூர்: மகாராஷ்டிரா, நாக்பூரில் வசித்து வருபவர் அமித் யாதவ்(35). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கியார்ஸியுடன் (35) சொந்த ஊரான மபி மாநிலம் கரன்பூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தியோலாபர் என்ற இடத்தில அடையாளம் தெரியாத கனரக வாகனம் பைக் மீது மோதியதில் கியார்ஸி உயிரிழந்தார். அமித் காயமடைந்தார்.அப்போது உடலை எடுத்து செல்ல வாகன ஓட்டிகளிடம் அமித் உதவி கேட்டுள்ளார். ஆனால் யாருமே அவருக்கு உதவவில்லை.
இதனால் ,தனது பைக்கில் மனைவியின் உடலை கட்டி எடுத்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.நாக்பூர்-சியோனி நெடுஞ்சாலையில் உள்ள காட்டு பகுதியில் நடந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சென்று பார்த்த போது வாகனத்தையோ உடலையோ காணவில்லை.
இதன் பின்னர் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக நாக்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பைக்கை போலீசார் நிறுத்தினர். இதையடுத்து பெண்ணின் உடலை கைப்பற்றி நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
