×

பழைய ஓய்வூதியத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

புதுடெல்லி: மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான திட்டமாகும். இது 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அல்லது அதற்கு பின் பணியில் சேரும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்கு பின் வரையறுக்கப்பட்ட சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர பரிசீலிக் கப்படவில்லை” என்றார்.

Tags : Nirmala Sitharaman ,New Delhi ,Union Finance Minister ,Lok Sabha ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...