×

வாழைப்பழ அப்பம்

தேவையானவை:

மைதா மாவு – ½ கிலோ,
வாழைப்பழம் 10 (தோலுரித்தது),
வெல்லம் – ¼ கிலோ,
நெய் – 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து மைதா மாவு, வாழைப்பழம் (மசித்தது), ஏலக்காய் பொடி சேர்த்து, நெய் விட்டு கலந்து தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த மாவு கலவையினை சிறு
சிறு அப்பமாக ஊற்றி எடுக்கவும். இது சாப்பிட சுவையான, ரொம்ப மிருதுவான அப்பமாகும்.

Tags :
× RELATED தேங்காய்ப்பால் பணியாரம்