திருப்பூர், ஆக. 9: திருப்பூர் பல்லடம் ரோடு ஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் வெளிமாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் வாங்கி பல்லடம் பகுதியில் உள்ள கோழிப்பண்னைகளுக்கு கொடுத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பிரவீனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் ராகேஷ் சிங் என்பவர் மக்காச்சோளம் விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறி அவருடைய செல்போன் என்னை பகிர்ந்திருந்தார்.
இதனை பார்த்த பிரவீன் அந்த செல்போன் எண்னுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசியவர் தன்னிடம் ரூ.7.30 லட்சம் மதிப்புடைய 35 டன் மக்காச்சோளம் இருப்பதாகவும், 80 சதவீதம் முன்பணம் கொடுத்து லாரியை அனுப்பிவிட்டால் மக்காச்சோளத்தை ஏற்றிவிடுவதாகவும், பல்லடத்தில் இறக்கிய பிறகு மீதமுள்ள 20 சதவீதம் பணம் கொடுக்க வேண்டுமென பிரதீப்பிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிரதீப் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 80 சதவீதம் பணமான ரூ.5.80 லட்சத்தை அனுப்பிவிட்டு, லாரியை அனுப்ப தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசியவரின் செல்போன் ஸ்விச்ட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரதீப் ஆன்லைன் மூலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
