×

பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

பாலக்கோடு, ஆக.9: பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (24). உணவகம் நடத்தி வரும் இவரும், தர்மபுரி மாவட்டம் மிட்டா ரெட்டி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திவ்யஸ்ரீ(19) என்பவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த திவ்யஸ்ரீரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு, வீட்டை விட்டு வெளியேறி நேற்று காலை பேளாரஅள்ளியில் உள்ள பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாலக்கோடு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருவரது பெற்றோரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, திவ்யஸ்ரீயின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திவ்யஸ்ரீயை ஆகாஷூடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags : Palacode police station ,Akash ,Belaralli ,Palacode ,Dharmapuri district ,Mitta Reddy Alli ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...