×

அரைகுறை ஆடை அணிந்தால்தான் அனுமதி சுடிதார் அணிந்த பெண்ணுக்கு டெல்லி ஓட்டலில் நுழைய தடை: விசாரணைக்கு அரசு உத்தரவு

புதுடெல்லி: டெல்லி பிதாம்புராவில் உள்ள தனியார் ஓட்டலில் சுடிதார் அணிந்த பெண்ணுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி பிதாம்புரா மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் துபாட்டா என்ற பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. கடந்த 3ம் தேதி இங்கு சுடிதார் அணிந்த பெண்ணும், அவருடன் ஒரு ஆணும் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த ஆண் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘பிதாம்புரா மெட்ரோ நிலைய வளாகத்தில் உள்ள துபாட்டா ஓட்டலுக்கு சென்றோம். அப்போது, என்னுடன் வந்த பெண் சுடிதார் அணிந்ததால் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அரைகுறையான ஆடைகளை அணிந்தவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவின் பாரம்பரிய உடைக்கு அங்கு அனுமதி இல்லை. அங்கிருந்த ஊழியர்களை எங்களை தவறாக நடத்தினர். இந்த சம்பவம் எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. ஊழியர்கள் இந்திய கலாசாரத்தையும் ஒரு பெண்ணையும் அவமதித்துவிட்டனர். இந்திய கலாச்சார உடைகளை அணிவது மோசமானதா? இதுபோன்ற உணவகங்களை உடனடியாக மூட வேண்டும். நமது கலாசாரத்திற்கு எதிரான ஒரு உணவகம் செயல்பட அனுமதிக்க முடியாது. நமது ஜனாதிபதி இங்கே வந்தாலும், அவரை உள்ளே விடமால் வெளியே தடுத்து நிறுத்தப்படுவார். இந்த ஆடைகளில் என்ன பிரச்சனை? இதுபோன்ற உணவகங்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது,’என்று பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலானதால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Delhi ,NEW DELHI ,DELHI PITAMPURA ,Dubata ,Delhi Pitampura Metro ,station ,
× RELATED நேஷனல் ஹெரால்டு வழக்கில்...