×

வாக்குகள் திருட்டு தொடர்பாக ராகுலின் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்காமல் அதை பொய் என எப்படி சொல்ல முடியும்? பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி: “வாக்குகள் திருடப்பட்டது குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பற்றி விசாரிக்காமல் அது பொய் என எப்படி சொல்ல முடியும்?” என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். வாக்குகள் திருடப்பட்டது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் ஆதாரங்களை வௌிப்படுத்தினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “வாக்குகள் திருடப்பட்டது பற்றி ராகுல் காந்தி பொதுவௌியில் ஆதாரங்களுடன் வௌிப்படுத்தினார். இந்த குற்றச்சாட்டுகள் பற்றி தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்காமலேயே ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு பொய் என எப்படி சொல்ல முடியும்? விசாரணை நடத்துவதற்கு பதிலாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி கேட்பது ஏன்? தேர்தல் முடிந்து 30 நாள்களுக்குள் மட்டுமே பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியும். இது வெறும் கட்சிகள் தொடர்பான விஷயம் இல்லை. வெறும் ஜோக் கிடையாது. இது நம் நாட்டின் ஜனநாயகம். வாக்குகள் திருடப்பட்டது பற்றி விசாரணை நடத்தும் பொறுப்பு பாஜவுடையது என தேர்தல் ஆணையம் நினைத்தால் அதை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi ,New Delhi ,Lok Sabha ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...