தேவையான பொருட்கள்
கருவாடு – 1/4 கிலோ
பச்சை மொச்சை – 1/4 கிலோ
பிஞ்சு கத்திரிக்காய் – 100 கிராம்
முருங்கைக்காய் – 2
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
புளி – எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் – ஒரு கப்
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – ஒரு குழி கரண்டி
கறிவேப்பிலை கொத்தமல்லி – ஒரு கைப்பிடி.
செய்முறை
கருவாட்டை நன்கு கழுவி சுடுதண்ணீரில் போட்டு வைக்கவும். பச்சை மொச்சையை வேக வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தேங்காய், வெங்காயம், பொட்டுக்கடலை, தக்காளி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி மசிய அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரைத்த தேங்காயை சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போனதும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும், தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ஊற்றவும். கொத்தமல்லி கீரை சேர்க்கவும். பச்சை மொச்சை கருவாட்டு குழம்பு தயார்.
