×

சேலத்து ஆடி மாத அம்மன் கூழ்

தேவையானப் பொருட்கள்

கம்பு – ஒரு டம்ளர்
கேழ்வரகு – ஒரு டம்ளர்
சிகப்பு சோளம் – ஒரு டம்ளர்
பச்சரிசி – ஒரு டம்ளர்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/2 லிட்டர்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
வடித்த சாதம் – 1 கப்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

கம்பு, கேழ்வரகு, சிகப்பு சோளம் ஆகியவற்றை 5 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அனைத்தையும் வெள்ளை துணியில் நிழலில் காய வைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகண்ட பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி நிலைக்கு வரும்போது அரைத்த மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கைவிடாமல் மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வெந்து கொண்டிருக்கும் களியை ஒரு துளி எடுத்துப் போடவும். தண்ணீரில் கரையாமல் இருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். அடுப்பை அணைக்கவும்.ஆறியதும் அதில் வடித்த சாதம், தயிர், சீரகப்பொடி உப்பு சேர்த்து கரைக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை அதன் மேல் போடவும். சுவையான சேலத்து ஆடி மாத அம்மன் கூழ் தயார்.

Tags :
× RELATED ப்ரோக்கோலி சூப்