×

அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம்; மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கலையரங்கில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டர். ஒன்றிய தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலத்துக்கு தனியாக கல்வி கொள்கை வெளியிட்டார். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் ஒற்றை இலக்கத்தில் இருந்த மாணவர் எண்ணிக்கை இவ்வாண்டு இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது.

மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறியும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்கிறேன். கொரோனா காலத்தில் குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க இல்லம் தேடி கல்வி வழங்கினோம். பள்ளிக்கல்வி வரலாற்றில் இது மிகவும் சிறப்புவாய்ந்த விழாவாகும். எல்லா மாணவர்களும் பல்லகல்வித்துறையில் இருந்து உயர்கல்வியில் சேர வேண்டும்.

திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வுதான். அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மாணவர்கள் மீது அரசு வாய்த்த நம்பிக்கையின் பலன்தான் மாணவர்களின் சாதனை. ஐஐடிக்களில் இந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்கள் 77 சேர்ந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் ஒன்றை இலக்கத்தில் இருந்த மாணவர் எண்ணிக்கை இவ்வாண்டு இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. காடு எதுவாக இருந்தாலும் சிங்கம் தான் சிங்கிள். எளிய பின்னணியில் இருந்து முயற்சியால் அரசு பள்ளி மாணவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர். மாநில கல்விக்கொள்கை வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையா ஆற்றலை வழங்கப் போகிறோம். மனப்பாடம் செய்வதை விட சிந்தித்து கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்க்கவே கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழும், ஆங்கிலமும் நம்முடைய இருமொழி கொள்கையாக இருக்கும். கல்வியோடு உடற்பயிற்சி, விளையாட்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் வேலைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் வழிகாட்டும். கல்வியில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறோம். கல்வி பாகுபாட்டை நீக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Principal ,M. K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Tamil ,Nadu ,Anna Centennial Library Art Gallery ,Coturpuram, Chennai ,K. Stalin ,Union ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு மலையாள நடிகர்...