×

சின்ன வெங்காய சாதம்

தேவையானவை

காய்ந்த மிளகாய் – 20 (இரண்டாக கிள்ளிக்கொள்ளவும்)
கடுகு, கடலைப் பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி
புளி விழுது – 2 தேக்கரண்டி
அரிசி சாதம் – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – ஒரு கப்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகைப் போடவும். வெடித்ததும், கடலைப் பருப்பு, மிளகாய்துண்டுகள், புளிவிழுது, உப்பு, மஞ்சள்தூள், அரிசி சேர்த்து 5 கப் (1:5 என்ற விகிதத்தில்) தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும்வரை சமைக்கவும். காரசாரமான சின்ன வெங்காய சாதம் ரெடி.

 

 

Tags :
× RELATED ப்ரோக்கோலி சூப்