×

தேவநாதன் யாதவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றத்தில் காவல்துறை எதிர்ப்பு

சென்னை: தேவநாதன் யாதவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது 3வது முறையாக அவர்கள் ஜாமின்கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாம் ஜாமினில் வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதி தன்னால் திருப்ப முடியும் என்று வாதம் முன் வைக்கப்பட்டது. அதே போல் சாட்சிகளை கலைக்கமாட்டார். கடுமையான நிபந்தனை கொடுத்தாலும் ஏற்று கொள்வதாக அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த சொத்துக்களில் பெரும்பாலானவை 3ம் நபரின் பெயரிலும் அதின் நிறுவனரின் பெயரும் இருப்பதால் அதனை முடக்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல் காவல் துறை தரப்பில் தேவநாதன் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு அதிகமாக இருப்பதாகவும் நிஜத்தில் அதன் மதிப்பு 48 கோடி மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது. தேவநாதன் யாதவ்க்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபினையும் இல்லை என உரிமையாளரிடமும், நிறுவனரிடமும் ஒப்புதல் பெற்று அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணையை மீண்டும் ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

 

Tags : Devanathan ,Yadav ,Chennai ,Chennai High Court ,Devanathan Yadav ,Judge ,Young ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...