×

வையப்பமலை கவிதாஸ் கல்லூரியில் தேசிய மாசு தடுப்பு தினம்

திருச்செங்கோடு, டிச.4: திருச்செங்கோடு அடுத்த வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தேசிய மாசு தடுப்பு தின உறுதி மொழியை, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சதிஸ்குமார் வாசிக்க, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஏற்றனர். தாவரவியல் துறைத்தலைவர் உதயசங்கர் வரவேற்றார்.  செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விலங்கியல் துறைத்தலைவர் பிரேம்தாஸ் நன்றி கூறினார்.

Tags : National Pollution Prevention Day ,Vaiyappamalai Kavidas College ,
× RELATED வையப்பமலை கவிதாஸ் கல்லூரியில் ராமானுஜர் பிறந்த நாள் விழா