×

இன்று தேசிய மாசு தடுப்பு தினம் அனுசரிப்பு: காற்று மாசு பிரச்னைக்கு ஒருங்கிணைந்த தீர்வு அவசியம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் தேதி தேசிய மாசு கட்டுப் பாட்டு நாள் அல்லது தேசிய மாசு தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நா ளின் முக்கிய நோக்கம் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொழில் துறை பேரழிவுகள் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு சோகத்தில் என்ற உயிரிழந்த மக்களின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தலை நகர் டெல்லி. மற்றும் சுற்றி இருக் கும் மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா ,உத்தர பிரதேசம் ஆகியவை கடுமையான காற்று மாசு பிரச்சனையை எதிர் கொண்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகு பயிர்க் கழிவுகளை எரிப்புதன் மூலமும் மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதன் மூலம் ஏற்படும் புகையும் ஏற்படுத்தும் காற்று மாசு நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக மாற்றி வருகின்றன.

திருவாரூர் மாவட்ட என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா கூறியாவது: தீபாவளி பட்டாசு வெடிப்பதன் காரணமாக இந்த ஆண்டு நவம்பர் 12ம் தேதி டெல்லி, நொய்டா , குருகிராம், லக்னோ, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் காற்று மாசு உச்சம் தொட்டு உள்ளது. காற்று தர குறியீட்டில் 420 முதல் 500 என்கின்ற அளவானது. ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு கூட சுவாசித்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை அடைவதாகவும் உள்ளது. 150 முதல் 200 வரை உள்ள அளவானது ஆஸ்துமா, நுரையீரல், இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஜீரோ முதல் 50 மட்டுமே பிரச்சனை இல்லாத அளவு என கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசின் காரணமாக ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை ஏற்படுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் 2023-ம் ஆண்டுக்கான காற்று தர வாழ்க்கை குறியீடு அறிக்கையின்படி, உலகின் 2வது மாசுபட்ட நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சராசரி இந்தியரின் ஆயுள்காலத்தை 5.3 ஆண் டுகள் காற்று மாசு குறைக்கும். அதே நேரம், வட இந்தியாவில் காற்று மாசு காரணமாக அங்கு உள்ளவா்களின் ஆயுள் 8 ஆண்டுகள் குறையும் என்கிறது அந்த அறிக்கை. இந்தியாவில் 103 கோடி போ், மாசு அளவில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலை மீறும் பகுதிகளில் வாழ்கின்றனா் என்று சொல்லப்படுகிறது.

1998-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாசு இப்போது 67.7 சதவீதம் அதிகரித்து ள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. காற்று மாசு காரணமாக இந்தியா வில் ஆண்டுக்கு 16.7 லட்சம் போ் இறக்கின்றனா் என மத்திய அரசின் அமைப் பான ஜ சி எம் ஆர் அறிக்கை கூறுகிறது. காற்று மாசு பிரச்னைக்கு தொலைநோக்கோடு கூடிய ஒருங்கிணைந்த தீர்வு கள் அவசியம் தற்போது ஒரு சில நகரங்களில் பிரச்னையாக உள்ள காற்று மாசு பரவலாக எல்லா நகரங்களின் பிரச்னையாக மாறிவிடாமல் இருக்க நீண்ட கால நோக்கிலான தீர்வு காண அரசு மற்றும் பொதுமக்கள் முன்ன தாகவே நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

The post இன்று தேசிய மாசு தடுப்பு தினம் அனுசரிப்பு: காற்று மாசு பிரச்னைக்கு ஒருங்கிணைந்த தீர்வு அவசியம் appeared first on Dinakaran.

Tags : National Pollution Prevention Day ,National Pollution Control Day ,India ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!