×

சோம்புக் கீரை வடை

தேவையானவை

கடலைப்பருப்பு – 1 கிண்ணம்

சோம்புக்கீரைஒரு கட்டு

சின்ன வெங்காயம் – 10

இஞ்சி – சிறு துண்டு

பச்சைமிளகாய் – 2

பூண்டுப் பல் – 2

பெருங்காயம்சிறிது

உப்புதேவைக்கேற்ப

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

கீரையை ஆய்ந்து அலசிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் சேர்த்து, அதனுடன் மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக, கெட்டியாக அரைத்தெடுக்கவும். இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் வடைகளைத் தட்டிப்போட்டு சுட்டெடுத்தால் சத்தான,சுவையான சோம்புக்கீரை வடை தயார்.

Tags :
× RELATED ப்ரோக்கோலி சூப்