தேவையானவை:
கெட்டி தேங்காய்ப்பால் – 1½ கப்,
நெய்யில் வறுத்த ஜவ்வரிசி – 100 கிராம்,
அரிசி மாவு – 100 கிராம்,
மிளகு, சீரகம் – தலா ½ டீஸ்பூன்,
தயிர் – ½ கப்,
கறிவேப்பிலை – சிறிது,
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
வறுத்த ஜவ்வரிசியை தேங்காய்ப் பாலில் ஊறவிடவும். ஊறியபின் மிக்ஸியில் போட்டு மாவாக வெண்ணெய் போல் நைசாக அரைத்து, அரிசி மாவு, மிளகு, சீரகம், பெருங்காயம், தயிர், கறிவேப்பிலை இவற்றையெல்லாம் போட்டு இட்லி மாவு பதத்துக்கு கலக்கி, குழிப்பணியார சட்டியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பணியாரம் போல் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
