×

வேளாண் அதிகாரி தகவல் வாகனம் மோதி வாலிபர் பலி

பெரம்பலூர், டிச. 4: பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அண்ணாநகரை சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜேந்திரன் (29). திருச்சியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் டூவிலரில் வேலைக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலை பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து ராஜேந்திரன் அண்ணன் காமராஜ் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன ராஜேந்திரனுக்கு சுதா என்ற மனைவியும், தமித் ஆருண் என்ற 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

Tags :
× RELATED வண்ணாரப்பேட்டையில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை