×

புரெவி புயல் எதிரொலி மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு

பாடாலூர், டிச. 4: புரவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதேபோல் ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் மாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள மருதை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொட்டரை - ஆதனூர் இடையே உள்ள தரை பாலத்தின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு ஆடு, மாடுகளை ஒட்டி செல்லவும், பொதுமக்கள் சென்று வரவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Tags : Flooding ,Maruthaiyar ,storm ,
× RELATED நெல்லை அருகே தரைப்பாலத்தில் ஆற்று...