×

அம்மா குடிநீர், அம்மா உணவகம் என பெயர் வைத்துவிட்டு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு எதிராக அதிமுக வழக்கு தொடர்வதா? அமைச்சர் கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.62.60 லட்சம் செலவில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை மருத்துவ பயனாளிகள், மருத்துவ மாணவர்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த கால ஆட்சியில் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா தீவு பூங்கா என்று எந்த திட்டம் தொடங்கினாலும் அம்மா என்று பெயரையே வைத்தார்கள். லட்சக்கணக்கான மக்கள் பயன் பெரும் நலம்காக்கும் ஸ்டாலின் திட்டத்தினால் திமுகவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கூடியிருப்பதன் காரணமாக காழ்ப்புணர்ச்சியினால் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Stalin ,Amma ,Amma canteen ,Chennai ,Minister ,M. Subramanian ,Tamil Nadu Government Dental College Hospital ,Amma island park ,DMK ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...