×

ஆணவ கொலைகளை தடுக்க கடுமையான சிறப்பு சட்டம்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விருத்தாசலத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெயசூர்யாவின் மரணம் தொடர்பான வழக்கில் தற்போது ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார். அவர் கூறியுள்ளது போல, தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தருகிறது. ஆணவப் படுகொலைகளை கடுமையான சிறப்பு சட்டங்கள் மூலமே தடுக்க முடியும் என்று அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆணவ படுகொலைகளை நிகழ்த்துவோர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்படும். ஆணவ கொலை எனும் சமூக தீமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Jayasuriya ,Virudhachalam ,Tamil Nadu ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை...