×

கடைகளில் சோதனை 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர்,டிச.4: திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம்  போலீசார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஹரிசெல்வம் (25) என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் சோதனை நடத்தியபோது அங்கு 10 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 10 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல்,திருப்பூர் வீரபாண்டி அடுத்த செட்டிபாளையம் பூங்கா நகர் பகுதியில் வீரபாண்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வரும் திருப்பூர் செட்டிபாளையம் டி.பி.என் காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் தினேஷ் ( 20) என்பவர் நடத்தி வரும் மளிகைக்கடையில் சோதனை செய்தபோது அங்கு 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீசார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 10 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags : stores ,
× RELATED பண்ணாரி சோதனைச்சாவடியில் ரூ.65 லட்சம்...