×

விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

ஊட்டி,டிச.4:நீலகிரி மாவட்ட திமுக., மாவட்ட செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் அறிவித்திருக்கிற விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் நிறைவேற்றி விவசாயிகளை வஞ்சித்துள்ளது. இதனை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனே ரத்து செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திலும், மாவட்ட தலைநகரான ஊட்டி ஏ.டி.சி சுதந்திர திடல் முன் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் துணை பொது செயலாளர், நீலகிரி எம்.பி ராசா தலைமையில்  நடைபெற உள்ளது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், கிளை செயலளார்கள், பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சி முன்னணியினர் உள்ளிட்ட வரும் தங்கள் பகுதிகளிலுள்ள நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தை வெற்றிப் பெற செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

Tags : DMK ,protest ,governments ,state ,
× RELATED உரிய நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து...