×

ஈரோடு வந்த முதல்வருக்கு வரவேற்பு

ஈரோடு, டிச.4:  தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரி விஜயலட்சுமி ஈஸ்வரமூர்த்தி  தம்பதியினரின் இல்ல திருமண விழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதற்காக  சேலத்தில் இருந்து கார் மூலம் நேற்று மாலை ஈரோடு வருகை தந்த தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்துறையில் எம்.எல்.ஏ.  தோப்புவெங்கடாச்சலம் தலைமையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்ரமணி  மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஈரோடு  எல்லைப்பகுதியான மேட்டுக்கடை என்ற இடத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில்  கலெக்டர் கதிரவன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து ஈரோடு மேற்கு  தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம், கிழக்கு தென்னரசு மற்றும் கட்சி நிர்வாகிகள்  வரவேற்றனர். திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பின்னர் கரூர் வழியாக மதுரை புறப்பட்டு சென்றார்.

Tags : Erode ,
× RELATED முதல்வருக்கு உற்சாக வரவேற்பு