×

ரயில் மோதி அரசு பஸ் டிரைவர் பலி

ஈரோடு,டிச.4:ஈரோடு-சாவடிப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட மோளகவுண்டன்பாளையம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண்  ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக ரயில்வே  போலீசாருக்கு தகவல் வந்தது.போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் கோபி கலிங்கியம் சாலையை சேர்ந்த  பழனிச்சாமி(54) என்பதும், அரசு பஸ்  டிரைவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஈரோட்டில் உள்ள  உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு,  ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றபோது, ரயில் மோதி  இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  இதையடுத்து பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே  போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Government bus driver ,
× RELATED ரயில் மோதி மூதாட்டி பலி