×

8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

*திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு

திருவண்ணாமலை : வந்தவாசி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, அரியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் வேலு(54). இவர் கடந்த மார்ச் 10ம் ேததி 2018ம் ஆண்டு பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமையை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

அதனால், சிறுமி அழுதபடியே ஓடி வந்து பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, கீழ் கொடுங்காலூர் போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட
சிறுமிகளின் தரப்பில் அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வேலுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த வேலுவை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,POCSO Court ,Thiruvannamalai ,Vandavasi ,
× RELATED ஜமாபந்தி நிகழ்ச்சி கலந்து...