×

50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல் ரகங்கள்

திருவாரூர், ஆக. 15: திருவாரூர் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஆத்தூர் கிச்சலிசம்பா, தூய மல்லி மற்றும் ரத்தசாலி முதலான பாரம்பரிய நெல் ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. பாரம்பரிய நெல் ரக விதைகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கிலோ ரூ.25 என்ற விலையில் விநியோகம் செய்யப்படும்.

ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ வரை மானியத்தில் வழங்கப்படும். சம்பா பரு வத்திற்கு ஏற்ற ரகங்களான ஆத்தூர் கிச்சலி சம்பா மற்றும் ரத்தசாலி விதைகள் வட்டாரத்திற்கு 2 ஆயிரம் கிலோ வீதம் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களுக்கும் சேர்த்து 20 ஆயிரம் கிலோ அளவுக்கு இருப்பில் உள்ளன. எனவே விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் ரக விதைககளை வாங்கி பயன்பெறலாம்.இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post 50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல் ரகங்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Agriculture Department ,Collector ,Charu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...