×
Saravana Stores

குஜராத் பாஜ அரசின் அலட்சியம் தொடர்கிறது: புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 3 பேர் பலி


காந்தி நகர்: குஜராத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். குஜராத் பாஜ அரசின் அலட்சியம் தொடர்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜ தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு மேலாக பாஜ தலைமையிலான ஆட்சிதான் நடக்கிறது. இந்நிலையில் பூபேந்திர படேல் தலைமையிலான ஆட்சியில் பல்வேறு திட்டங்களில் ஊழல்கள் நடந்து வருவது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாலம் கட்டுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளது. இதனால்தான் கட்டும்போதே பாலங்கள் இடிந்து விழுவது தொடர் கதையாகி விட்டது. கடந்தாண்டு மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கு பாஜ ஆட்சியின் அலட்சியமே என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் இருந்து இன்னும் பாஜ அரசு பாடம் கற்று கொள்ளாமல் இருக்கிறது. இந்நிலையில் பாலன்பூரல் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாலத்தின் இடிபாடுகளுக்கு அடியில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் புதைந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. தற்போது பாலம் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பாஜ அரசு பாலங்களை தரமுடன் கட்டாமல் மீண்டும் அலட்சியத்துடனே செயல்பட்டு வருகிறது.

The post குஜராத் பாஜ அரசின் அலட்சியம் தொடர்கிறது: புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gujarat Baja government ,Gandhi Nagar ,Gujarat ,Gujarat Baja ,Gujarat Bajaj Government ,Dinakaran ,
× RELATED போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது