- ஆதார்
- வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்
- வேலூர்
- வேலூர், ராணிப்பேட்டை
- திருப்பத்தூர்
- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம்
- எல்காட் நிறுவனம்
- வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள்
- தின மலர்
வேலூர், ஆக.9: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 30,065 பேருக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு, புதுப்பித்தல் செய்யப்பட்டுள்ளதாக ஆதார் பதிவு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்ககம் மற்றும் எல்காட் நிறுவனம் சார்பில் அனைத்து அரசு, அரசு நிதி உதவி பள்ளி, தனியார் பள்ளிகளில், பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு எனும் சிறப்பு திட்டத்தினை பள்ளி கல்வித்துறை சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு பள்ளிகளில் என்று சுழற்சி முறையில் ஆதார் பதிவு, புதுப்பித்தல் செய்யப்படுகிறது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கலெக்டர்களின் உத்தரவின்பேரில் ஆதார் ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் தாலுகா வாரியாக, ஒரு தாலுகாவிற்கு 2 பள்ளிகள் வீதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. புதிய ஆதார் 3வயது முதல் 17 வயது உள்ளவர்களுக்கும், ஆதார் திருத்தம் 5 வயது முதல் 15 வயது பூர்த்தியானவர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்று குடியாத்தம் அரசு நிதி உதவி பள்ளியான திருவள்ளுவர் பிரைமரி பள்ளி உட்பட 11 பள்ளிகளில் முகாம் நடந்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 பள்ளிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் வேலூர் மாவட்டத்தில் புதிதாக 226 பேருக்கும், புதுப்பித்தல் 10,017 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 225 பேருக்கும், 18,178 பேருக்கு புதுப்பித்தலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 159 பேருக்கும், புதுப்பித்தல் 10,260 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டது. 3 மாவட்டங்களில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதியும் திட்டத்தின் கீழ் மொத்தம் 39,065 பேருக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 39,065 பேருக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு, புதுப்பித்தல் அதிகாரிகள் தகவல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் appeared first on Dinakaran.