×

விகேபுரம் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்த 32 குரங்குகள் கூண்டுவைத்து பிடிப்பு: அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன


விகேபுரம்: விகேபுரம் வட்டாரத்தில் குடியிருப்புகளில் அட்டகாசம் செய்து வந்த 32 குரங்குளை கூண்டுவைத்து பிடித்த வனத்துறையில் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர். நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு – வி.கே.புரம், வேம்பையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் ெசய்துவந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட துணை இயக்குநர் இளையராஜா பிறப்பித்த அறிவுறுத்தலின் பேரில் இவ்வாறு தொல்லை கொடுத்து வந்த 33 குரங்குகள் பாபநாசம் வனச்சரக வனப்பணியாளர்கள் மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. பின்னர் இவை அடர்ந்த வனப்பகுதிக்குள் நல்ல முறையில் திரும்ப விடப்பட்டுள்ளதாக பாபநாசம் வனச்சரகர் குணசீலன் தெரிவித்தார்.

The post விகேபுரம் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்த 32 குரங்குகள் கூண்டுவைத்து பிடிப்பு: அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Nellai district ,Kalakkadu Mundanthurai Tiger Reserve ,Ambasamudram Forest Reserve ,Sundarapuram Street ,Papanasam Forest Reserve ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...