×
Saravana Stores

தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது

சென்னை: சென்னை தேனாம்பேட்டையை ேசர்ந்தவர் சதீஷ்குமார்(40). ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளரான இவர், டிடிகே சாலையில் துரித உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு வேளச்சேரியை சேர்ந்த பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடி மணி(எ)பாட்டில் மணி என்பவர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் மிரட்டி சென்றார். இதுகுறித்து கடையின் உரிமையாளரான சதீஷ்குமார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மீண்டும் கடந்த 14ம் தேதி ரவுடி பாட்டில் மணி அவரது நண்பர் ரபீக் ஆகியோர் ஆட்டோவில் வந்து, எங்கள் மீதே புகார் அளிக்கிறாயா என கத்திமுனையில் மிரட்டிரூ.27 ஆயிரம் பணத்தை பறித்து ெசன்றனர். இதுகுறித்து மீண்டும் சதீஷ்குமார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் போலீசார் சிசிடிவி பதிவுகளின் படி, தலைமறைவாக இருந்து வந்த வேளச்சேரி ஜெகநாதபுரம் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்(எ) பாட்டில் மணி(30), பெசன்ட் நகர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரபீக்(34) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

The post தலைமறைவாக இருந்த 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Satish Kumar ,Thenampet, Chennai ,TDK Road ,Mani ,Bottle Mani ,Velachery ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை கோரி...