×

பல்லடம் பனியன் நிறுவனத்தில் பணி வங்க தேசத்தினர் 26 பேர் கைது

பல்லடம்: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் புகுந்து, போலி ஆதார் அட்டைகள் மூலம் திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக திருப்பூர் மாவட்ட உளவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து பல்லடம்- திருப்பூர் பிரதான சாலையில் உள்ள டிகேடிமில் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த நிறுவனத்தில் 26 வங்கதேசத்தினர் போலி ஆதார் கார்டு மூலம் வேலை செய்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

The post பல்லடம் பனியன் நிறுவனத்தில் பணி வங்க தேசத்தினர் 26 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Palladam Banyan Company ,Palladam ,Tiruppur District Intelligence Unit ,India ,Banyan ,Tiruppur ,Palladam- ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்