×
Saravana Stores

12 வயது மாணவி பலாத்காரம்; கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு


திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே கராத்தே படிக்க வந்த 12 வயது மாணவியை பலாத்காரம் செய்த மாஸ்டருக்கு 110 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ2.75 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் மோகனன் (51). கராத்தே மாஸ்டரான இவர் அப்பகுதியில் ஒரு கராத்தே பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கராத்தே பயின்று வருகின்றனர். இந்நிலையில் மோகனனிடம் கராத்தே படிக்க வந்த 12 வயது மாணவியிடம் கராத்தே சொல்லிகொடுக்கும்போது நெருக்கமாக பழகியுள்ளார்.

பின்னர் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் முண்டக்கயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து மோகனனை கைது செய்தனர்.  இந்த வழக்கு ஈராற்றுபேட்டை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஷன் தாமஸ், கராத்தே மாஸ்டர் மோகனனுக்கு 110 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ2.75 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

The post 12 வயது மாணவி பலாத்காரம்; கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டு கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karate ,Kerala ,Thiruvananthapuram ,Kottayam ,Mundakayam ,Rala ,Kerala Court of ,Dinakaran ,
× RELATED தென் இந்திய கராத்தே போட்டியில் 28 பதக்கங்கள் வென்று மதுரை மாணவர்கள் சாதனை