மதுரை: மதுரை மாவட்டத்தில், 10 பேர் கொண்டு குழுவிற்கு நவீன சலவையகம் அமைக்க, அரசு தரப்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழுலுக்கு ஏற்பவும் 10 பேரைக் கொண்ட குழுவாக அமைத்து நவீன சலவையகம் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இதற்கு குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20க்குள் இருக்க வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
இதன்படி 10 பேரைக் கொண்ட ஒரு குழுவாக அவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இந்த குழுவின் உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராகவும், குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உதவி பெற ஆர்வமுள்ள சலவைத் தொழிலில் முன் அனுபவம் இருப்பவர்கள் ஒரு குழுவாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூன் 30க்குள் தங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். இத்தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post 10 பேர் கொண்ட குழுவிற்கு நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி appeared first on Dinakaran.
