×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாக்கவயல் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

காரைக்குடி, மே 20: காரைக்குடி அருகே சாக்கவயல் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் பெற்றுள்ளனர். மாணவர் பாண்டியராஜா 500க்கு 467 பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அர்ஜூன் 500க்கு 436 பெற்றுள்ளார். கீர்த்திகா 500க்கு 427 பெற்றுள்ளார். பாண்டிமீனாள் 500 க்கு 414 பெற்றுள்ளார். ரா.கீர்த்திகா 500க்கு 402 பெற்றுள்ளார். சமூக அறிவியல் பாடத்தில் ஒருவர் 100க்கு 100 பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் முனைவர் ஈஸ்வரி, ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பிடிஏ மற்றும் எஸ்எம்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டினர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாக்கவயல் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Sakwayal Government High School ,Pandyaraja ,Sewage Public School ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...