×

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வில் காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

ஆறுமுகநேரி, மே 20: காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத்தேர்வு எழுதிய 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் மாணவிகள் கதீஜா வாபிக்கா மற்றும் சித்தி கதீஜா ஆகியோர் 486 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தனர் .12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியலில் மாணவி பாத்திமா சிரின் மற்றும் கணினி பயன்பாட்டியலில் மாணவி ஐதுரூஸ் பாத்திமா பஹீமா ஆகியோர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றனர். தேர்ச்சி பெற்ற அனைவரையும் பள்ளி தலைவர் முகமது ஹசன், துணை தலைவர்கள் செய்யது அப்துல்காதர், முகம்மது லெப்பை, தாளாளர் முகமது சம்சுதீன் முதல்வர் ரத்தினசாமி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

The post 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வில் காயல்பட்டினம் முகைதீன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kayalpattinam Mukaideen Matriculation School ,Arumuganeri ,Kayalpattinam Mukaideen Matriculation ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...