×

வை. மத்திய ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் சாயர்புரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

ஏரல், ஏப்.27: சாயர்புரத்தில் வை. மத்திய ஒன்றிய திமுக மற்றும் பேரூர் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தலைமை வகித்த மத்திய ஒன்றியச் செயலாளர் பி.ஜி. ரவி, நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்தார். முன்னிலை வகித்த சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் நீர்மோர் வழங்கினார். இதில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா, பெருங்குளம் பேரூர் செயலாளர் நவநீதமுத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் பத்திரகாளிமுத்து, சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் முத்துராஜா, வார்டு செயலாளர்கள் சுதாகர், அன்பழகன், பொன்ராஜ், தங்கராஜ், ஆத்திராஜா, விளையாட்டு மேம்பாட்டு அணி சுபாஷ், மாணவரணி துணை அமைப்பாளர் ஜோன்ஸ்பர், சிறுபான்மைஅணி துணை அமைப்பாளர் ஜாஸ்பர், விவசாய தொழிலாளர் அணி மதியழகன், பொன்ராஜ், வர்த்தகர் அணி பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ், வாடபூராஜா, விஜய், நம்பிசெல்வன், ராஜவேல், விக்னேஷ் மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post வை. மத்திய ஒன்றிய, பேரூர் திமுக சார்பில் சாயர்புரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Central Union ,Perur DMK ,Neermor Pandal ,Sayarpuram ,Central Union DMK ,P.G. Ravi ,Central Union, ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...