×

₹2.51 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

போச்சம்பள்ளி, நவ.26: போச்சம்பள்ளி வேளாண் ஒழங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் கொப்பரை ஏலம் இ-நாம் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2045 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் கொப்பரை கிலோ அதிகபட்சமாக ₹140க்கும், குறைந்தபட்சமாக ₹85க்கும், சராசரியாக ₹130க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 2,045 கிலோ கொப்பரை ₹2 லட்சத்து 51 ஆயிரத்திற்கு விற்பனையானது என கண்காணிப்பாளர் அருள்வேந்தன் தெரிவித்தார்.

The post ₹2.51 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : BOCHAMPALLI ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளியில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி