×
Saravana Stores

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 9: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி கலெக்டர் திருவில்லிபுத்தூர் மஜீத் நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தையும், மருத்துவர் காலனி FSTP வளாகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.42.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் மையத்தையும் ஆய்வு செய்தார்.

மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திருவில்லிபுத்தூர் ஆணையாளர் த.ராஜமாணிக்கம், வட்டாட்சியர் முத்துமாரி, மேலாளர் பாபு மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur Municipality ,Srivilliputhur ,Collector ,Jayaseelan ,Thiruvilliputhur Majeed Nagar ,Dinakaran ,
× RELATED சிக்காத சிறுத்தை மாற்று இடத்தில் கேமரா வைக்க வனத்துறை முடிவு