×

வைகை ஆற்றினை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி உயிரி உரம் தயாரிக்கலாம்: தன்னார்வலர்கள் கோரிக்கை

 

மதுரை, ஜூன் 16: கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் மதுரை வைகையாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி உயிரி உரம் அல்லது பயோ டீசல் தயாரிக்க பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் இருந்து மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

மேலும் மதுரை மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் வைகை ஆறு விளங்குகிறது. இதற்கிடையே வைகையாற்றில் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கலப்பதும் குப்பைகள் கொட்டப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் அசுத்த நீரில் மிகுதியாக வளரும் ஆகாயத்தாமரைகள் ஆற்றுப்பகுதியை அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளது.

குறிப்பாக மதுரை யானைக்கல் தரைப்பாலம் மற்றும் தைக்கால் பாலம் பகுதிகளில் ஆகாயத்தாமரை அதிக அளவில் படர்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் சுகாதாரக்ேகடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும் சூழல் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வைகையில் தண்ணீர் வரும்போது, ஆகாயத்தாமரைகள் நீரோடத்திற்கு பெரும்

The post வைகை ஆற்றினை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி உயிரி உரம் தயாரிக்கலாம்: தன்னார்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaigai River ,Madurai ,Theni ,Western Ghats… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...