×

வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு வரவேற்பு நிகழ்வு

 

மதுரை, ஜூலை 1: வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆங்கிலத்துறை, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் எஸ்.கோமதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் பி.அல்லி, புதிய ஆசிரியர்களை வாழ்த்தி, வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொலைநோக்கு பார்வை மற்றும் அதற்கான செயல்பாடுகள் குறித்தும், நிறுவனத்தின் விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் கலாசார வழிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை (EEE) தலைவர் டாக்டர் ஏ.சண்முகலதா, கல்லூரியின் தொழில்முறை பணி கலாசாரம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார், மேலும் நிறுவனத்தின் கல்வித் தரங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ள ஆசிரியர்களை ஊக்குவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு டீன் மற்றும் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் (ECE) துறைத் தலைவர் டாக்டர் எஸ்.வாசுகி, தொடர் கற்றலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், ஒரு நல்ல ஆசிரியருக்கு சமூகத்தை வடிவமைக்கும் சக்தி உள்ளது என்ற அவர், மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கைகளில் உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டினார். முடிவில் குமாரி எஸ்.பெனிட்டா நன்றி கூறினார்.

The post வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு வரவேற்பு நிகழ்வு appeared first on Dinakaran.

Tags : Velammal Engineering College ,Madurai ,English Department of Velammal College of Engineering and Technology ,Head ,English Department ,Dr. ,S. Gomathi ,College Principal ,P. Alli ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...